தியானம்

தியானம் செய்யாதீர் ! தியானம் பழகாதீர்!!
——————————
என்ன இவன் பயித்தியமா? அனைவரும் தியானம் செய் என்று சொல்லும் வேளையில், தியானம் செயாதே என்கிறானே !! என்று நினைக்கிறீர்களா!!

நிச்சயமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன், இன்றைய காலகட்டத்தில் தியானத்திற்கு என்று வகுப்பிற்கு செல்பவர்களும், தியானத்திற்கு என்று நேரம் ஒதுக்குபவரும் மகா மகாமுட்டாள்கள்.

தியானத்திற்கு என்று அமரும் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவர்கள் தியானம் செய்யவில்லை, தங்கள் மனதுடனும், சிந்தனைகளுடனும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று.

உங்களை நீங்கள் உத்தமர் என்று நினைக்கிறீரா??
தியானத்திற்கு என்று நேரமும் இடமும் ஒதுக்கி அமருங்கள். கண்களை மூடுங்கள்!!
பிறகு தெரியும் உங்கள் மனதில் காமமும், வெறியும், காழ்ப்புணர்ச்சியும், மோகமும், குரோதமும், விரோதமும்……………. எவ்வளவு உங்களை பீடித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.

சாதாரணமாக, அமைதியாக இருக்கும் மனம் கூட, தியானம் என்றவுடன் ஆழிப்பேரலை போல் பொங்கி எழுந்துவிடும்.

உண்மையில் தியானம் செய்யும் ஒவ்வொருவரும் தியானம் செய்யவில்லை. தத்தம் மனதுடன் போரில் ஈடுபட்டுள்ளார்கள்.

முதலில் தியானம் என்றால் என்னவென்று புரியவேண்டும். பிறகு தியானம் பழகவேண்டும்.

மனதில் எதோ ஒரு மந்திரத்தை பல ஆயிரம் முறை ஜபிப்பது, ஒரு புள்ளியிலோ, விளக்கிலோ, ஜோதியிலோ, கட்டைவிரல் ரேகையிலோ மனதை குவிப்பதுதான் தியானம் என்று மிகவும் தவறாக புரிந்துள்ளனர். அவ்வாறு மனதை ஓரிடத்தில் குவிப்பது “மன ஒருமைப்பாடு” (concentration) ஆகும். அது தியானம் அல்ல.

நீங்கள் எத்தனை மணிநேரம் அமர்ந்திருந்தாலும் உங்கள் மனதில் சிறு அசைவும் தோன்றாமல், மனம் அமைதியாக, சூனியமாக, எந்த எண்ணமும் இல்லாமல் இருக்குமேயானால், அதுவே தியானநிலை (meditation) ஆகும்.

இந்த உன்னத நிலையை அடைய ஒரே ஒரு பயிற்சிதான் உள்ளது. அது, நீங்கள் எந்த செயல் செய்யும்போதும் அந்த செயலிலேயே முழு கவனத்தையும் வைத்து, என்னத்தை சிதறவிடாமல் பழகுவதே ஆகும்.
உதாரணமாக நீங்கள் உங்கள் மகிழூந்தை இயக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். அப்பொழுது முழுகவனத்தையும் வாகனத்தை இயக்குவதிலேயே செலுத்தி, தேவையற்ற சிந்தனையை தவிர்த்து பழக வேண்டும்.

நீங்கள் மதிய உணவை உண்ணும்போது, தொலைகாட்சியையோ, முகப்புத்தகத்தையோ நோண்டாமல், தேவையில்லாமல் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு அளிக்கப்பட உணவை ரசித்து, ருசித்து முழுமையாக உண்டால் நீங்கள் தியானத்தை பழகினவர் ஆவீர்.

எனக்கு மூச்சிவிடவும், பசித்தால் உணவு உண்ணவும் கற்றுக்கொடுங்கள் என்று யாரிடமாவது நீங்கள் கேட்டதுண்டா!!

தியானமும் நீங்கள் முச்சு விடுவதைப்போன்றதே! யாரும் உங்களுக்கு தியானம் கற்றுத்தர முடியாது. நீங்களாகத்தான் அதை அடையவேண்டும். அதாவது உங்கள் “தீவிர முயற்சியால்”
தியானம் என்பது “விழிப்பாக இருப்பது” அவ்வளவே. வீண் சிந்தனைகளும், கற்பனைகளும் உங்களை அடிமைப்படுத்தாமல் விழிப்பாக இருங்கள். அந்த விழிப்பு நிலையே தியானம்.

வீண் சிந்தனையை, சிந்தனையுடன் சண்டையிடாமல் தவிற்பதே தியானம். வேலைசெய்யும் போது அந்த வேலையிலேயே கவனமாக இருப்பதால் வீண் சிந்தனையை தவிற்கலாம்.

சும்மா இருக்கும்போது மனதையும் கற்பனை ஏதும் இன்றி சும்மா இருக்க பழகுங்கள். ஆனால் மனதுடன் சண்டை பிடிக்காதீர்கள். சிந்தனைகளை கவனியுங்கள். இயல்பாகவே வீண் சிந்தனைகள் நின்றுவிடும்.

தியானம் உங்கள் வாழ்வின் ஒரு அங்கம் ஆகிவிடும். நீங்களும் மகரிஷிகள் ஆகிவிடுவீர்கள்!!!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s